மனைவியை கொலை செய்த நபரை அடித்தே கொன்ற மக்கள்!

நிசார் குரேஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக நிசார் குரேஷின் சகோதரர் தாக்குதல் தொடுத்தவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
 | 

மனைவியை கொலை செய்த நபரை அடித்தே கொன்ற மக்கள்!

 உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில்  சேர்ந்த 40 வயதான நிசார் குரேஷி என்பவர் மனக்கசப்பின் காரணமாக தன்னை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை காண சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த  நிசார் குரேஷி தன்னுடைய மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். அதோடு தன்னுடைய மாமியார் மற்றும் மைத்துனரையும் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் பெண்ணை கொடுரமாக தாக்கி கொலை செய்த அந்த நபரை பார்த்த பொதுமக்கள் ஆத்திரத்தில் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர் .  இதில் நிசார் குரேஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக நிசார் குரேஷின் சகோதரர் சுமார் 150 நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். அதோடு நிசார் குரேஷி தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP