புதிய பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்... அந்தரத்தில் தொங்கிய பரிதாபம்..

மகாராஷ்டிராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதை பொதுமக்கள் வீடியோ எடுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
 | 

புதிய பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்... அந்தரத்தில் தொங்கிய பரிதாபம்..

மகாராஷ்டிராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதை பொதுமக்கள் வீடியோ எடுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியை சேர்ந்தவர் தானாஜி காம்ளே (50). இவரது மகன் 4 மாதங்களுக்கு முன்பு ரயில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததால் மனமுடைந்த தானாஜி அன்று முதல் மனக்கவலையில் சுற்றிதிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை  தானாஜி காம்ளே சிவாஜி நாக்கா அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது ஏறி, அவர் கொண்டு வந்திருந்த துணியை மேம்பாலத்தில் உள்ள ஒரு துணியில் கட்விட்டு மறுமுனையை கழுத்தில் கட்டு கொண்டு நின்றுள்ளார். இதை கீழே சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் கண்டு இறங்கும்படி கூறி சத்தம்போட்டுள்ளனர். 

சில நிமிடங்களில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் தூக்கு போடுவதற்காக கட்டப்பட்ட துணியில் தொங்கினார். ஆனால் இரண்டு கைகளால் துணியை இறுக பிடித்துகொண்டதால் அவரது கழுத்து இறுகவில்லை. அந்தரத்தில் தொடங்கி கொண்டிருந்த அவரை அங்கு கூடி இருந்த மக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். மேலும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனிடையே, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாலத்தில் ஒருவர் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் வந்து பார்த்துள்ளனர். தற்கொலைக்கு முயன்றதை கேட்டு உடனடியாக செயல்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த கிரேனை கொண்டு வந்து அவரை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP