கால்நடைகளை காப்பாற்ற வெறும் கைகளால் சிங்கத்தை விரட்டிய வாலிபர்

குஜராத் மாநிலத்தில் தன்னுடைய கால்நடைகளை காப்பாற்ற அதன் உரிமையாளர் வெறும் கைகளால் சிங்கத்தை விரட்டும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
 | 

கால்நடைகளை காப்பாற்ற வெறும் கைகளால் சிங்கத்தை விரட்டிய வாலிபர்

குஜராத் மாநிலத்தில் தன்னுடைய கால்நடைகளை காப்பாற்ற அதன் உரிமையாளர் வெறும் கைகளால் சிங்கத்தை விரட்டும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பர்மான் கிராமத்தில் உள்ள ஒரு தொட்டியில் கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்று இரவு சிங்கம் ஒன்று 15 அடி சுற்றுப்புற சுவரை தாண்டி கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்த தொட்டிக்குள் புகுந்தது.

உடனே அங்கிருந்த கால்நடைகள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து ஓட தொடங்கியது. இதைப்பார்த்த அந்த தொட்டியின் உரிமையாளர் தைரியமாக வெறும் கைகளால் சிங்கத்தை விரட்டினார்.

சிங்கமும் அங்கிருந்து ஓடி விட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP