கொச்சியை அச்சுறுத்தி வந்த இடுக்கி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கேரளாவில் இடுக்கி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் மதகுகள் அடுத்தடுத்த நிலையில் மழையின் அளவை கருத்தில்கொண்டு மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 | 

கொச்சியை அச்சுறுத்தி வந்த இடுக்கி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கேரளாவில் இடுக்கி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் மதகுகள் அடுத்தடுத்த நிலையில் மழையின் அளவை கருத்தில்கொண்டு மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து நீடித்து வருகிறது. இதனால் அங்கு 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுவட்டார பகுதிகள் அனைத்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 

இதுவரை 37  பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3,890 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 56 குடும்பங்களின் வீடுகள் முற்றிலுமாக நாசமாகின. 929 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் நூற்றுக்கணக்கான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக 17 முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்தவ உதவிகளை அதிகாரிகளும் தன்னார்வலர்களும் ஏற்படுத்தி வருகின்றனர். 

10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது இடுக்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையில் அளவு குறைந்துள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் அளவு 2399 அடியாக உள்ளது .இடைவிடாத மழையினால் வெள்ளிக்கிழமையன்று இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டன. இதன் வெள்ளநீர் சூழ்ந்து கொச்சி நகரமே வெள்ளக்காடானது.

இடுக்கி அணை நீர்மட்டம் தன் முழு கொள்ளளவிலிருந்து குறைந்துள்ளது. இருந்தும் எர்ணாகுளம் மற்றும் திரிசூர் மாவட்டங்களின் பகுதிகள் இன்னும் மூழ்கிய நிலையில் உள்ளதால் நீர்வரத்தை பொருத்து மதகுகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. எர்ணாகுளம், திருசூர் மற்றும் இடுக்கி பகுதிகளில் மிகுதியான வெள்ளம் ஏற்படுவதற்காக வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ள ஆபாய எச்சரிக்கை திரும்பப் பெறப்படவில்லை. 

இதற்கிடையே பாதிப்படைந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், நிலம் வீடு இழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP