கோவாவில் ஆட்சியமைக்க ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும்: கோரிக்கை வைத்த காங்கிரஸ்

கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலாமானார். இன்று அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
 | 

கோவாவில் ஆட்சியமைக்க ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும்: கோரிக்கை வைத்த காங்கிரஸ்

கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 63 வயதான கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலாமானார். இன்று அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாகவே கோவா அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் பாஜக எம்எல்.ஏ. பிரான்ஸிஸ் டி சோசா மரணம் அடைந்தார். இவரது மறைவையடுத்து பாஜக-வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்றும் தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தற்போது கோவா முதல்வர் மரணமடைந்துள்ளதால், கோவாவில் ஆட்சி அமைக்க தங்களை ஆளுநர் மிருதுளா சின்ஹாஅழைப்பு விடுக்க வேண்டும் எனக்கோரிக்கையுடன் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP