காரிலேயே மேற்கு வங்கம் செல்லும் முதல்வர்!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர், மேற்கு வங்க மாநிலத்தில் தரையிறங்க அந்த மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், இன்று அவர் காரிலேயே அங்கு செல்ல உள்ளார்.
 | 

காரிலேயே மேற்கு வங்கம் செல்லும் முதல்வர்!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர், மேற்கு வங்க மாநிலத்தில் தரையிறங்க அந்த மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், இன்று அவர் காரிலேயே அங்கு செல்கிறார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம், புருலியாவில் பாஜகவின் பொதுக்கூட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவரது ஹெலிகாப்டர் அங்கு தரையிறங்க மேற்கு வங்க மாநில அரசு திடீரென அனுமதி மறுத்தது. 

இந்த நிலையில் இன்று, இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ வரை ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டுள்ள உத்தரப் பிரதேச முதல்வர், அங்கிருந்து புருலியாவுக்கு காரில் பயணித்து பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP