2 தொகுதிகளில் களமிறங்கும் முதல்வர்!

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன், ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திற்கு எதிராக காங்கிரசும், பாஜகவும் வியூகத்துடன் களமிறங்கியுள்ளன.
 | 

2 தொகுதிகளில் களமிறங்கும் முதல்வர்!

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன், ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்திற்கு எதிராக காங்கிரசும், பாஜகவும் வியூகத்துடன் களமிறங்கியுள்ளன. 

மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் 2000-ம் ஆண்டிலிருந்து  கடற்கரை மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தின் ஹின்ஜிலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று வருகிறார். 

தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக் ஹின்ஜிலி தொகுதியுடன் பிஜிபூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP