இன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஃபனி என்ற பெயர் சூட்டப்பட்டது

ஒடிசா மாநிலம் புவேனஸ்வரில், இன்று பிறந்த பெண் குழந்தைக்கு, ஃபனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 | 

இன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஃபனி என்ற பெயர் சூட்டப்பட்டது

ஒடிசா மாநிலம் புவேனஸ்வரில் இன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஃபனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒடிசாவில் ஃபனி புயல் இன்று கரையை கடந்தது. இதன் காரணமாக அங்கு மணிக்கு, 240 கிலோ  மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. ஒடிசா கடற்கரை ஓரங்களில்  கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில், ரயில்வே பெண் ஊழியருக்கு இன்று காலை அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, அந்த பெண் குழந்தைக்கு ஃபனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP