6 வயது சிறுவனின் இரக்க குணத்தை கண்டு வியந்த மருத்துவர்

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனின் இரக்க குணத்தை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், மனித நேயத்தை அழகாக எடுத்துக்கட்டும் சம்பவம் ஒன்று மிசோரமில் நிகழ்ந்துள்ளது.
 | 

மிசோரம் மாநிலத்தில் உள்ள சைராங் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் டிரெக் எ லால்சன்ஹிமா. அவன், சைக்கிள் ஒட்டும் போது தவறுதலாக ஒரு கோழிக்குஞ்சு  மீது ஏற்றிவிட்டான். 

இந்த சம்பவத்தின் போது அந்த கோழிகுஞ்சு பரிதாபமாக உயிரிழந்தது. கோழிக்குஞ்சு இறந்து போனதை அறியாத சிறுவன், கருணையோடு அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளான். 

மருத்துவமனையில் பார்ப்பதற்கு பணம் வேண்டும் என்பதால், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாயை பணத்தையும் எடுத்து சென்றுள்ளான்.  ஒரு கையில் கோழிக்குஞ்சையும் மற்றொரு கையில், 10 ரூபாயுடனும் அப்பாவித்தனமாக சிறுவன் நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP