17வது முறையாக மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ள 103 வயது முதியவர்

ஹிமாச்சல பிரதேசத்தில், மூத்த வாக்காளரும், தேர்தல் ஆணையத்தின் வாக்கு விழிப்புணர்வு தூதராக உள்ள, ஓய்வு பெற்ற ஆசிரியர், ஷியாம்நேகி, நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவில் 17வது முறையாக தனது வாக்கினை செலுத்துகிறார்.
 | 

17வது முறையாக மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ள 103 வயது முதியவர்

ஹிமாச்சல பிரதேசத்தில், மூத்த வாக்காளரும், தேர்தல் ஆணையத்தின் வாக்கு விழிப்புணர்வு தூதராக உள்ள, ஓய்வு பெற்ற ஆசிரியர், ஷியாம்நேகி, நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவில் 17வது முறையாக தனது வாக்கினை செலுத்த உள்ளார்.

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பா கிராமத்தைச் சேர்ந்தவர் 103 வயதான ஷியாம் சரண் நேகி.  இவருக்கு 3 மகன்களும், 5 மகள்களும், மற்றும் பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் 1951ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இதுவரை 16 முறை மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளார். 17வது முறையாக நாளை இவர் தனது வாக்கினை பதிவு செய்யவுள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முறையான வாக்காளர் பயிற்சி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டத்தின்படி, தேர்தல்ஆணையத்தின் விளம்பர தூதராக ஷியாம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் குலு மாவட்டத்திலுள்ள பஞ்சார் பகுதியில் உள்ள சக்தி கிராமத்தை சேர்ந்த ஷரி தேவி என்ற 108 வயது மூதாட்டி நாளை நடைபெறும் வாக்கு பதிவில் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP