Logo

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: சுணக்கமாகியுள்ள ஆப்பிள் அறுவடை!!

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையடுத்து பயங்கரவாதிகள் ஆப்பிள் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரின் பிரதான விவசாயப் பொருளான ஆப்பிள் அறுவடை மேற்கொள்ளும் பணிகள் சுணக்கமான நிலையிலேயே நடைபெற்று வருகின்றன.
 | 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: சுணக்கமாகியுள்ள ஆப்பிள் அறுவடை!!

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையடுத்து பயங்கரவாதிகள் ஆப்பிள் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரின் பிரதான விவசாயப் பொருளான ஆப்பிள் அறுவடை மேற்கொள்ளும் பணிகள் சுணக்கமான நிலையிலேயே நடைபெற்று வருகின்றன.

ஜம்மு காஷ்மீரின் வர்த்தகத்தில் முக்கிய பொருளாக கருதப்படுவது ஆப்பிள். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையடுத்து,  தற்போது நிலைமை சற்று சீரான போதும், மக்கள் தினசரி வாழக்கை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

காஷ்மீர் ஆப்பிள்கள் பெரிதளவில் பயிரிடப்படும் ஷோப்பியன் நகரில் தீவிரவாத நடமாட்டங்களும் அதிகம் காணப்படும். ஒவ்வொரு ஆண்டிலும் இந்த மாவட்டத்தில்  மட்டும் சுமார் 30 முதல் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஷோப்பியன் மாவட்ட தோட்டங்களிலிருந்து மட்டும் வருடத்திற்கு சுமார் 2 லட்சம்  பெட்டி ஆப்பிள்கள் அறுவடை செய்யப்படுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த ஷோப்பியன் மாவட்ட தோட்டங்களும், வர்த்தகம் நடைபெறும் நகர்ப் பகுதிகளும் தற்போது பெரிய அளவில் ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "காஷ்மீரில் ஆப்பிள்கள் தான் முக்கிய வர்த்தக பொருள். விவசாயிகள் அறுவடை செய்யும் ஆப்பிள்களை மத்திய அரசு நேரடியாக வாங்கிக் கொள்வதாக அறிவித்தும் உள்ளது.

இருந்தபோதிலும், மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை நடைபெறத் தொடங்கினால், இதுவரை அவர்களை பயமுறுத்தி அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக செயல்பட்டதுபோல இனிவரும் காலங்களில் செயல்பட முடியாது என்ற நிலைக்கு பயங்கரவாதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே விவசாயிகளையும், வர்த்தகர்களையும் பயமுறுத்தும் நோக்கில் அவர்களின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் பொதுவான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் அடர்த்தியான ஆப்பிள் தோட்டங்களில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள காரணத்தால் ஆப்பிள் அறுவடை சுணக்கமாகவே நடைபெற்று வருகிறது.

அறுவடை சமயங்களில் கலைகட்டியிருக்கும் இந்த தோட்டம் தற்போது ஆள் அரவமின்றி காணப்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது"  என்று அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த சட்டம் வரும் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP