Logo

போலீஸ் அதிகாரியாக இருந்து தீவிரவாதியானவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்காெல்லப்பட்டனர்.
 | 

போலீஸ் அதிகாரியாக இருந்து தீவிரவாதியானவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்காெல்லப்பட்டனர். 

பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்துமீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவமும் இதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள இந்து சித்தாபுரா என்ற கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் லஷ்கர் - இ- தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் ஜம்மு -காஷ்மீர் மாநில காவல் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பணியில் இருந்தபோது துப்பாக்கியுடன் மாயமானவர் என்றும் இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்து ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP