அயோத்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் !!

உத்திரப்பிரதேசம் : அயோத்தியா வழக்கில், வரும் நவம்பர் 17 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக எச்சரித்துள்ளது இந்திய உளவுத்துறை.
 | 

உத்திரப்பிரதேச மாநிலத்தில், இன்று காலை தொடங்கியுள்ள 14வது கோஸி பரிக்ரமா நாளை காலை முடிவடையவிருப்பதை தொடர்ந்து, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பாகிஸ்தானை  பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 7 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய உளவுத்துறை. 

உளவுத்துறையின் எச்சரிக்கை படி, குறிப்பிடப்பட்டுள்ள 7 பயங்கரவாதிகளில், முஹமது யாகுப், அபு ஹம்சா, முஹமது ஷாபாஸ், நிஸார் அஹமது மற்றும் முஹமது கௌமி ஆகிய 5 பயங்கரவாதிகளின் பெயர்களை உளவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. 

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP