தெலங்கானாவின் முதல் தேர்தல்: சமூக வலைதளங்களில் பரபரக்கும் கட்சிகள் 

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் சமூக வலைதலங்களையும் வாட்ஸ் ஆப் குழுக்களையும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன.
 | 

தெலங்கானாவின் முதல் தேர்தல்: சமூக வலைதளங்களில் பரபரக்கும் கட்சிகள் 

தெலங்கானா சட்டப்பேரவையில் போட்டியிடும் பிரதான கட்சிகள் அனைத்தும் சமூக வலைதலங்களையும் வாட்ஸ் ஆப் குழுக்களையும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன. அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாக சமூக வலைதலங்களையே நம்பி வலம் வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி, தனது முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளையும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திர சேகர ராவ் கண்காணித்து வருகிறார். 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 6, 2018ல் ஆட்சி கலைக்கப்பட்டது. இதன்மூலம் முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில் தேர்தல் வியூகத்தை கட்சிகள் சமூக வலைதளங்களில் மிகத் தீவிரவாக காட்டத் தொடங்கியுள்ளன. ஐதராபாத்தின் காந்தி பவனில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகத்தில், அக்கட்சியின் சமூக ஊடகங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹஸிபா ஆமின் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் கட்சிக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசனை நடத்தினார். 

இதற்கு காரணம் தெலங்கானாவில் 1.4 கோடி மக்கள் இணையத்தை பிரதானமாக பயன்படுத்துவது தான். அதோடு சமூக வலைதளங்களில் தனி நபரின் எண்ணோட்டத்தை அறிந்துகொள்வது எளிதாக இருப்பதும் முக்கியக் காரணமாகும். தென்னிந்திய மாநிலத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணியாக தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்கானா ஜன சமிதி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஆனால் இன்றளவும் முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இவர்களது கூட்டணி உள்ளது. 

சந்திர சேகர ராவால் கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் பாஜகவின் 5 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை அதிகப்படுத்த பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  

அக்டோபர் மாதம் முதல், சமூக வலைதளங்களில் காங்கிரஸுக்கு ஆதரவான அடித்தளம் கிடைக்கப்பெற்றதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹஸிபா ஆமின் கருதுகிறார் . சமூக வலைதளத்தில் மக்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் கூகுள் ட்ரெண்ட்-ஐ கருத்தில் கொண்டு அவர் இந்த நம்பிக்கையை முன்வைக்கிறார். 

தேர்தல் சூடுபிடித்தது முதல், தேலங்கானாவை பொறுத்தவரை மக்கள் தீவிரமாக கட்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.  முன்னதாக கட்சி செயல்பாடுகள், நலத்திட்டங்கள், அரசு செயல்பாடுகள் குறித்து மட்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், சமீபத்தில் தேர்தல் பரப்புரையும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் ஆகியவற்றில் இடம்பெற தொடங்கிவிட்டதாகவும் ஹஸிபா ஆமின் கூறுகிறார். அதிலும் காங்கிரஸ் கட்சி தான் சமூக ஊடகங்களில் முன்னிலை வகிப்பதாகவும் பெருமை கூறுகிறார். 

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தொழில்நுட்ப பிரிவை கவனித்துவரும் கேடி ராவ் கூறுகையில், ''எங்கள் கட்சி அனைத்து சமூக வலைதளங்களிலும் தீவிரமாக உள்ளது. எங்கள் கட்சி எப்போதும் நேர்மறையான பிரச்சாரங்களையே மேற்கொண்டு வருகிறது. மற்றக் கட்சிகள் எப்போதும் இழிவான மூம்கலையே பயன்படுத்துகின்றன. நாங்கள் தற்காலத்துக்கு ஏற்றவாறு சர்த்திருத்தத்தோடு சிந்தித்து செயல்படுகிறோம்'' என்றார். தெலங்கானா  ராஷ்ட்ரிய சமிதி தங்களது கட்சிக்கு சமூக வலைதளங்களில் பத்து லட்சம் ஆதரவாளர்கள் இருப்பதாக கூறுகிறது. 

இது போல பாஜகவும், வாட்ஸ் ஆப் க்ரூப்களில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 4,000 வாட்ஸ்ஆப் குழுக்களில் 250 கட்சி உறுப்பினர்கள் தொகுதி வாரியாக, மண்டல வாரியாக, பூத் வாரியாக என பாஜக-வினர் இவர்களுக்கு ஒரு படி மேல் சென்று தங்களது கட்சியின் கொள்கைகளை பரப்பி வருகின்றனர். 

தேர்தல் கமிஷன் கண்காணிப்பில் சிக்கும் மீம்கள்...

அனைத்துக் கட்சிகளும் அவர்களுக்கென சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. இருப்பினும் தொழில்நுட்பத்தை கையாளும்போது சில வரம்புகள் அனைத்துத் தரப்பிலும் மீறப்படுகின்றன. இவற்றை கட்சிகள் கண்டும் காணாமல் இருந்தாலும், தெலங்கானா மாநில தேர்தல் கமிஷன் இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது. வரம்பு மீறும் சமூக வலைதள பிரச்சாரங்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை பாய்வதால் கட்சிகளும் நிர்வாகிகளை நியமித்து சர்ச்சையில் சிக்காமல் இருக்க பார்ப்பதாக அனைத்து தரப்பு கட்சிகளும் உஷாராக களம் இறங்குகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP