வீரமரணமடைந்த வீரர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- தெலங்கானா அரசு அறிவிப்பு

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் (சிஆர்பிஎஃப்) குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
 | 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,  புல்வாமாவில் கடந்த 14 -ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 38 பேர் வீரமரணம் அடைந்தனர்.

உலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனமும், உயிரிழந்த வீரர்களுக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றன.

இத்தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில அரசுகள் நிதியுதவியை அறிவித்து வருகின்றன. பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தனிநபர்களும் தங்களாலான நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அமிர்தானந்தமயி மடம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசும் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த வரிசையில் தற்போது, தெலங்கானா மாநில அரசும் இணைந்துள்ளது. புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பத்துக்கும் தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அந்த மாநில அரசு  இன்று அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP