காவல் ஆணையர் மீது ஒழுங்கா நடவடிக்கை எடுங்க...மம்தாவுக்கு மத்திய அரசு உத்தரவு !

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
 | 

காவல் ஆணையர் மீது ஒழுங்கா நடவடிக்கை எடுங்க...மம்தாவுக்கு மத்திய அரசு உத்தரவு !

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில அரசிடம் மத்திய உள்துறை  அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ  ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றது.

சிபிஐ-யின் இந்நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டார். அவரது போராட்டத்தில் அரசு உயரதிகாரியான ராஜீவ் குமார் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP