Logo

சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் !

சூரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பததுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் !

சூரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பததுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சூரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், கட்டடத்தில் இருந்து குதித்த 15 மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.   இந்த தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.  மாலை சுமார் 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த தளத்தின் கூரை தெர்மாகோலால் அமைக்கப்பட்டுள்ளதால், தீ வேகமாக பரவியதாகவும் கூறப்படுகிறது.  

இந்த தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  தீவிபத்து குறித்து மிகவும் தான் வேதனையடைவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பததுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP