Logo

சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க உச்சநீதிமன்றம் தடை

மும்பை அரபிக்கடல் ஓரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 | 

சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க உச்சநீதிமன்றம் தடை

மும்பை அரபிக்கடல் ஓரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கடற்கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலை அமைக்க அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இச்சிலையை அமைக்க மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கினார். 
இதனையடுத்து சிலை அமைக்கும் திட்டப்பணி தொடங்கி நடைபெற்ற வந்தது. 

இந்நிலையில் உரிய சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சிலை அமைக்கப்படுகிறது என பாதுகாப்பு திட்ட அறக்கட்டளை என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மும்பையில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP