Logo

நீரில் மூழ்கிய பீகார், உ.பி. மாநிலங்கள் - 4 நாட்களில் 80 உயிரிழப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, கிழக்கு பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த மழையினால் 4 நாட்களில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
 | 

நீரில் மூழ்கிய பீகார், உ.பி. மாநிலங்கள் - 4 நாட்களில் 80 உயிரிழப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, கிழக்கு பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த மழையினால் 4 நாட்களில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பெரும்பாலான நகரங்களில் இன்னும் 24 மணி நேரம் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டியும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கனமழையின் காரணமாக, பீகார் மாநிலத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமணைகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதிப்படைந்துள்ளது. தண்டவாளங்கள் முழுவதும் நீரில் மூழ்கியதால், ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீகாரின் பாட்னா நகரில், ஆட்டோ மீது மரம் விழுந்து 4 பேரும், கனமழை காரணமாக பாகல்பூரிலும் 3 பேரும் உயிரிழந்தனர். பாட்னா முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மழையை விட, உத்திரபிரதேச மாநிலத்தில், கடந்த வெள்ளியன்று, 1700 சதவீதம் அதிகமாக மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கனமழை காரணமாக, சனிக்கிழமை அன்று உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் மழையினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பீகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில், இன்னும் இரண்டு தினங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "மழையினால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். மருத்துவமணைகள் உட்பட அனைத்தும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மழை நிற்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. எனினும், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் உதவியுடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் அவர்களிடம் கொண்டு சேர்க்க அரசு முயன்று வருகிறது" எனக் கூறியுள்ளார்.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP