மாணவர்கள் போராட்டம்! பெங்களூரு, மங்களூருவிலும் 144 தடை உத்தரவு!

மாணவர்கள் போராட்டம்! பெங்களூரு, மங்களூருவிலும் 144 தடை உத்தரவு!
 | 

மாணவர்கள் போராட்டம்! பெங்களூரு, மங்களூருவிலும் 144 தடை உத்தரவு!

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   நாங்கள் இந்தியர்கள் என்று பெயரில் டெல்லியின் லால் கிலாவிலிருந்து பகத் சிங் பூங்கா வரை பேரணி நடத்த மாணவர் அமைப்பினர் திட்டமிட்டிருக்கிறார்கள். இதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியிலும் செங்கோட்டையின் சில பகுதிகளிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மாணவர்கள் போராட்டம்! பெங்களூரு, மங்களூருவிலும் 144 தடை உத்தரவு!

போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டிருந்த பகுதிகளான லால் கிலா, ஜாமா மஸ்ஜித், சாந்தினி சவுக், விஷ்வ வித்யாலயா உள்ளிட்ட ஏழு மெட்ரோ ரயில்நிலையங்களில் சேவை இல்லை என அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் இடதுசாரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காலை ஆறு மணி முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். 

மாணவர்கள் போராட்டம்! பெங்களூரு, மங்களூருவிலும் 144 தடை உத்தரவு!

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் கலைத்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் காரணமாக மங்களூருவில் மூன்று காவல்நிலையம் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிரபித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வரை அறிவிக்கபட்டுள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP