செல்பி மோகத்தால் உயிரிழந்த மாணவர்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் அருகே அமைந்து உள்ள சுற்றுலாத் தலத்தில் செல்பி எடுக்க முயன்ற மாணவர் ஒருவர் ஓடும் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார். அவரின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 | 

செல்பி மோகத்தால் உயிரிழந்த மாணவர்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் அருகே அமைந்து உள்ள சுற்றுலாத் தலத்தில் செல்பி எடுக்க முயன்ற மாணவர் ஒருவர் ஓடும் தண்ணீரில் தவறி விழுந்து  உயிரிழந்தார்.

தற்போதுள்ள நவீன உலகில் ஆட்டிப் படைத்து வரும் செல்பி மோகத்தால் மேலும் ஒரு பரிதாபமாக உயிர் பறிபோனது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்களில் சிலர் பீம குண்டா என்ற சுற்றுலாத் தலத்தில் திரண்டு இருந்தனர். 

அப்போது ஒரு மாணவன் தனது நண்பர்களுடன் ஆபத்தான பாறைகளின் மீது நின்று கொண்டு, அவரது மொபைலில் செல்பிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி அவர் ஆற்று வெள்ளத்தில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. அவரின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP