இலங்கை வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி: பெங்களூரில் பலத்த பாதுகாப்பு !

இலங்கையில் நிகழும் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களின் எதிரொலியாக பெங்களூரு மற்றும் மைசூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

மத வழிபாட்டு தலங்கள், மார்க்கெட்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், விமானநிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும்,  தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், பெங்களூரு காவல்துறை ஆணையர் சுனீல் குமார் தெரிவித்துள்ளார். 

மேலும், உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு வழக்கமான எச்சரிக்கை வந்து கொண்டே இருப்பதால் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP