ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக அமேதியில் செயல்பட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
 | 

ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக அமேதியில் செயல்பட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.

இந்நிலையில் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட பரூலியா கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் என்பவரை இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP