அந்தம்மா பேச்சையெல்லாம் சீரியசா எடுத்துக் கொள்ள முடியாது: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

இந்திய ராணுவ அதிகாரி குறித்து, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முஃப்தியின் கருத்துகளை எல்லாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
 | 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வானா மாவட்டத்தைச் சேரந்த ராணுவ வீரரான தவ்ஷீப் வானியை, ராணுவ முகாமில் அவரது மேலதிகாரியான சுக்லா கொடுமைப்படுத்தியதாகவும், என்கவுன்ட்டரில் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

"இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ச ராணுவ அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிடிபி கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடி தரும் வகையில் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறும்போது, "தேர்தல் நேரத்தில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்துடன் மெஹ்பூபா இவ்வாறான கருத்துகளை கூறி வருகிறார்.

ராணுவத்தினரை விரக்தியடைய செய்யும் விதத்திலான அவரது கருத்துக்களை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மத்திய, மாநில அரசுகள் எப்போதும் ராணுவத்தினருக்கு பக்கபலமாக தான் இருக்கும். அதேசமயம், தவறிழைக்கும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று சத்யபால் மாலிக் கூறினார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP