முன்னாள் முதல்வரை சோதனையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

முன்னாள் முதல்வரை சோதனையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை  விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆ ந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியடைய, சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் பதவியை இழந்தார். புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். 

தற்போது, ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் கட்சி கூட்டத்தில் பங்கேற்கச் செல்ல விஜயவாடா விமான நிலையத்துக்கு  வந்தார். நாயுடுவுக்கு இசட் பிளஸ்  பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையத்திற்கு வந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதோடு, விமான நிலையத்திலிருந்து உள்ளே சென்று விமானம் ஏற அவருக்குத் தனி வாகனமும் அளிக்கப்படவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் பயணிகளுடன் பயணிகளாகப் பேருந்தில் பயணித்து விமானம் நிற்கும் இடத்தை அடைந்தார். இந்த சம்பவத்தால் ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP