தீவிரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்புப் படை!

நவ்காம் மாவட்டத்துக்குள்பட்ட சுட்சூ கலான் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக மாநில போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினருடன் இணைந்து போலீஸார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 | 

தீவிரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்புப் படை!

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், நவ்காம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நவ்காம் மாவட்டத்துக்குள்பட்ட சுட்சூ கலான் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக மாநில போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினருடன் இணைந்து போலீஸார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சுட்சூ கலான் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு போலீஸார் சுட்டதில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த அலி மற்றும் இட்ரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP