சபரிமலை விவகாரம்: கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

சபரிமலை ஐயப்ப கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதையடுத்து நாளை கேரளாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

சபரிமலை விவகாரம்: கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

சபரிமலை ஐயப்ப கோயில் விவகாரம் தொடர்பாக நாளை கேரளாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்களை, வரும் ஜனவரி 22ம் தேதி விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற அமர்வு நேற்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP