அமிர்தசரஸ் தாக்குதல் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் பரிசு: அமரிந்தர் சிங்

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசின் ராஜசன்சி கிராமத்தில் மத வழிபாட்டின் போது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
 | 

அமிர்தசரஸ் தாக்குதல் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் பரிசு: அமரிந்தர் சிங்

அமிர்தசரஸ் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசின் ராஜசன்சி கிராமத்தில் மத வழிபாட்டின் போது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு,  அல் குவைதா பயங்கரவாத அமைப்பின் கமான்டர் ஜாகிர் முசா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் வந்து சென்றதற்கான சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை பஞ்சாப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமிர்தசரஸ் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். போலீஸ் உதவி எண்ணான 181 ல் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP