அயோத்தியில் ராமர் கோவில்:  500 மாவட்டங்களில் சாமியார்கள் கூட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல். கடந்த 2 தினங்களாக சுமார் 300 சாமியார்கள் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.
 | 

அயோத்தியில் ராமர் கோவில்:  500 மாவட்டங்களில் சாமியார்கள் கூட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து மத சாமியார்கள் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) அயோத்தி செல்லும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் ஆதரவு திரட்டும் பணியை மேற்கொள்ள இந்து சாமியார்கள் முடிவு செய்துள்ளனர்.  கடந்த 2 தினங்களாக சுமார் 300 சாமியார்கள் ஒன்று கூடி ஆலோசித்த பிறகு இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த பொதுக்கூட்டங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய சட்டத்தை இயற்றி உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP