பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த ராஜஸ்தான் அரசு - தமிழக மக்கள் ஏக்கம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்புக்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள சூழலில் பெட்ரோல் - டீசல் மீதான விற்பனை வரியை குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர்.
 | 

பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த ராஜஸ்தான் அரசு - தமிழக மக்கள் ஏக்கம்!

பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவதைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்புக்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த சூழலில் பெட்ரோல் - டீசல் மீதான மாநில விற்பனை வரியை நான்கு சதவிகிதம் குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க சார்பில் வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இந்த நிலையில், பெட்ரோல் - டீசல் மீதான விற்பனை வரியை நான்கு சதவிகிதம் குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அந்த உத்தரவில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 30ல் இருந்து 26 சதவிகிதமாகவும் டீசல் மீதான விற்பனை வரி 22ல்இருந்து 18 சதவிகதாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 வரை குறையும். இதனால், ராஜஸ்தான் மாநில மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசும் தன்னுடைய வரிவிதிப்பில் குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதேபோல் தமிழக அரசும் விற்பனை வரியை குறைத்த மக்களை பெரும் சுமையில் இருந்து காக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

- newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP