ராகுலுக்கு சோதனை மேல் சோதனை: ராஜஸ்தான் அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டிலும் பஞ்சாயத்து!

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டில் முதலவர், துணை முதல்வர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையில் புதன்கிழமை சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 | 

ராகுலுக்கு சோதனை மேல் சோதனை: ராஜஸ்தான் அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டிலும் பஞ்சாயத்து!

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டில் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இந்த விவகாரம்  தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் புதன்கிழமை நள்ளிரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ராஜஸ்தான்  சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து அங்கு  முதல்வர் பொறுப்பை ஏற்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும்  மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவியது. 

ராகுல் காந்தி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அசோக் கெலாட் மாநில முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நிலையில், மாநிலத்தின் புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டது. இதில், 13 கேபினட் அமைச்சர்கள் உள்பட 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். 

இருப்பினும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

குறிப்பாக, உள்துறை மற்றும்  நிதித் துறையை முதல்வர் தன் வசமே வைத்து கொள்வதை சச்சின் பைலட் விரும்பவில்லை. மேலும், தமது ஆதரவாளர்களுக்கு குறிப்பிட்ட துறைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால், புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து  அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை புதன்கிழமை நள்ளிரவு டெல்லிக்கு அழைத்து, அவர்களிடம் ராகுல் காந்தி மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து ஒரு வழியாக இன்று, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு விவரத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது.  இதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புள்ளியியல் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP