புதுச்சேரி சட்டப்பேரவையில் இஸ்ரோவுக்கு பாராட்டு

புதுச்சேரி சட்டப்பேரவையில், சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
 | 

புதுச்சேரி சட்டப்பேரவையில் இஸ்ரோவுக்கு பாராட்டு

புதுச்சேரி சட்டப்பேரவையில், சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திராயன் -2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது விண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த மைக்கல் என்றே கூறலாம். சந்திராயன் -2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அந்தவகையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை போன்று விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குவது பெருமையளிப்பதாகவும், சந்திராயன்2 திட்டவிஞ்ஞானிகள் அனைவருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் எனவும் பேசினார்.

இதை தொடர்ந்து புதுச்சேரி எம்.எல்.ஏக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து சட்டப்பேரவையில் பேசினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP