உத்தரப்பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா

லோக்சபா தேர்தலுக்கு இன்றில் இருந்து 3 நாட்கள் உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய தொடங்கினார். கங்கை நதியில் படகில் சென்றபடி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.
 | 

உத்தரப்பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா

லோக்சபா தேர்தலுக்கு இன்றில் இருந்து 3 நாட்கள் உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய தொடங்கினார். கங்கை நதியில் படகில் சென்றபடி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.

அடுத்த மாதம் முதல் மக்களவை தேர்தல் தொடங்க உள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடபட்டு வருகின்றனர். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கங்கை நதி யாத்திரை மேற்கொண்டார். மூன்று நாட்கள் பயணமாக 140 கி.மீ தூரம் நதிக்கரை ஓரமாக வாழும் கிராம மக்களை சந்தித்து பேச உள்ளார். 

அவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். முன்னதாக அவர் திரிவேணி சங்கமத்தில் நீராடினார். பின்னர் அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.காங்கிரஸ் சார்பாக உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் அதிக கவனம் ஈர்த்து உள்ளார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP