பிரதமர் மோடி கங்கையில் புனித நீராடினார்

உத்தரப்பிரேதச மாநிலம் பிராயக்ராஜ் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கும்ப மேளாவில் கலந்து கொண்டு கங்கையில் புனித நீராடினார்.
 | 

பிரதமர் மோடி கங்கையில் புனித நீராடினார்

உத்தரப்பிரேதச மாநிலம் பிராயக்ராஜ் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கும்ப மேளாவில் கலந்து கொண்டு கங்கையில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ் நகரில் கும்ப மேளா விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடு பக்தர்கள் கோடிக்கணக்கில் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கும்ப மேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். முன்னதாக பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

 

 

திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார். பிரதமர் நரேந்திர மோடி கும்ப மேளாவில் கலந்து கொண்ட முதல் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP