ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார் பிரதமர் மோடி !

குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கேவதியாவில் உள்ள குஜராத்தின் ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அமைப்பினரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
 | 

ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார் பிரதமர் மோடி !

குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கேவதியாவில் உள்ள குஜராத்தின் ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார்.

குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்றார். அங்கு கேவதியாவில் உள்ள குஜராத்தின் ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்ட அவர் அங்கு நடந்த எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை மற்றும் மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட்டார் பிரதமர் மோடி !

இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் படையினர் துப்பாக்கியால் செய்த சாகச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் குஜராத் மாநில சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சாகச நிகழ்ச்சிகளும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநில போலீசாரின் வருடாந்திர கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். மேலும் பாஜகவின் மகளிர் அமைப்பினரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP