காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி !

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசை வார்த்தை கூறி விவசாயிகளை காங்கிரஸ் கட்சி ஏமாற்ற பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்றார்.
 | 

காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி !

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசை வார்த்தை கூறி விவசாயிகளை காங்கிரஸ் கட்சி  ஏமாற்ற பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 

உத்தரப்பிரதசே மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காசிபூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். 

அதில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று ஆசை வார்த்தையை கூறி அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. கடந்த 2009ம் ‌ஆண்டு தேர்தலின் போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. 

ஆனால் ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆகவே காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகளின் காவலனாக மத்திய அரசு உள்ளது. அதனால் திருடர்கள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார். 

ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று தாெிவித்தார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP