ஆறு மாநில முதல்வர்கள் கையெழுத்திட்ட திட்டம்!

யமுனை நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள ரேணுகாஜி பல்நோக்கு அணைக்கட்டும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் முதல்வர்கள் இன்று கையெழுத்திட்டனர்.
 | 

ஆறு மாநில முதல்வர்கள் கையெழுத்திட்ட திட்டம்!

விவசாயப் பாசனம், குடிநீர்,  நீர் மின்சக்தி உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு, யமுனை நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள ரேணுகாஜி பல்நோக்கு அணைக்கட்டும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட  ஆறு மாநிலங்களின் முதல்வர்கள் இன்று கையெழுத்திட்டனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின்படி யமுனை மற்றும் அதன் கிளை நதிகளான டோன்ஸ், கிரி ஆகியவற்றின் குறுக்கே மூன்று அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நதிகள், ஹிமாச்சல பிரசேதத்தில் உற்பத்தியாக, ராஜஸ்தான் மாநிலம் வரை  பாய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP