பாட்னா : சுகாதார பேரழிவைத் தடுக்க வெள்ள நீரில் ரசாயனங்கள் தெளிக்க உத்தரவு !

சுகாதார பேரழிவைத் தடுக்க, பாட்னா முனிசிபல் கார்ப்பரேஷன் வெள்ள நீரில் ரசாயனங்கள் தெளிக்கத் தொடங்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பிரதயா அம்ரித் தெரிவித்துள்ளார்.
 | 

பாட்னா : சுகாதார பேரழிவைத் தடுக்க வெள்ள நீரில் ரசாயனங்கள் தெளிக்க உத்தரவு !

சுகாதார பேரழிவைத் தடுக்க, பாட்னா முனிசிபல் கார்ப்பரேஷன் வெள்ள நீரில் ரசாயனங்கள் தெளிக்கத் தொடங்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பிரதயா அம்ரித்  தெரிவித்துள்ளார். 

கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக, பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கியது . தொடர் கனமழையால்  பீகாரில்  ஏறக்குறைய 73 பேர்  உயிரிழந்துள்ளனர். அங்குள்ள  பல பகுதிகளிலிருந்து தண்ணீர் வடிய  தொடங்கியதோடு நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. 

மாநில அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர்  தொடர்ந்து மக்களை மீட்டு வருகின்றனர். ஆனால் பாட்னாவின் பல தாழ்வான பகுதிகள் இன்னும் நீருக்கடியில் உள்ளன. பேரழிவு தரும் இந்த கனமழையின் எதிரொலியாக  குறைந்தது 17.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மீட்பு பணிகள்  குறித்து பேட்டியளித்துள்ள பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பிரதயா அம்ரித் கூறியதாவது:  49 படகுகளை நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறோம். இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் உணவுப் பொருட்கள் வழங்க பயன்படுத்த படுகிறது. மேலும் தேங்கியுள்ள  தண்ணீரை வெளியேற்றுவதற்காக மூன்று சிறப்பு விசையியக்கக் குழாய்கள் விலாஸ்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.  என கூறிய அவர், 

சுகாதார பேரழிவைத் தடுக்க, பாட்னா முனிசிபல் கார்ப்பரேஷன் வெள்ள நீரில் ரசாயனங்கள் தெளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP