எங்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள்- மாயாவதி அதிரடி

உத்தரப்பிரதேசத்தில் அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் எங்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
 | 

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாகவும் மே 23ஆம் தேதிக்குப் பிறகு அந்த இருகட்சியும் இணைந்து மாயாவதியைக் கழட்டி விட்டு விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வலிமையானது.

எங்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும், அது நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும் எங்கள் கட்சி தொண்டர்கள் அத்தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்திக்கு வாக்களிப்பார்கள் என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP