Logo

ஒடிசா- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணை நிற்கும் : பிரதமர் மோடி

ஒட்டு மொத்த நாடும், மத்திய அரசும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

ஒடிசா- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணை நிற்கும் : பிரதமர் மோடி

ஒட்டு மொத்த நாடும், மத்திய அரசும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநில மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் இன்று காலை கரையை கடந்த ஃபனி புயலால் அசுர வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதியில் உள்ள மக்கள் கடுமையான புயலை எதிர்கொண்டுள்ள நிலையில், நாம் இங்கு கூடியுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

புயல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடற்கடை, பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் படைகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஒட்டு மொத்த நாடும், மத்திய அரசும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநில மக்களுக்கு துணையாக நிற்கும்" என்று அவர் உறுதியளித்தார்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP