ஓபிஎஸ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி, காரைக்காலுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவேற்றவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
 | 

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில்,  அதிமுகவினர் காரைக்கால் துறைமுகத்தில் மணல் இறக்குமதி செய்யப்படுவதில் முறைகேடு நடப்பதாகவும், தனியார் நிறுவனங்கள் மணலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். 

அதற்கு விளக்கம் அளித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மணல் தட்டுப்பாட்டை போக்க 10 நிறுவனங்களுக்கு மணல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்ப்பட்டுள்ளதாகவும், மணலின் தரத்தை பொறுத்து தனியார் நிறுவனங்கள் மணல் விலையை நிர்ணயம் செய்வதாகவும்  கூறினார். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP