எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் திறப்பு- கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கேரள மாநிலம் பாலக்காட்டில் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் இன்று திறந்து வைத்துள்ளார்.
 | 

இந்த இல்லமானது 100 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அருகாட்சியகமும், எம்.ஜி.ஆரின் உருவப்படமும் இடம் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் இல்லத்தை புதுப்பிக்கும் பணியை மனிதநேய ஐஏஎஸ் அறக்கட்டளை நிர்வாகி சைதை துரைசாமி முன்னின்று நடத்தியுள்ளார். 

சுமார் 1 கோடி ரூபாய் அளவில் இந்த இல்லமானது சீரமைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள வடவனூர் என்ற இடத்தில் உள்ள இந்த இல்லத்தில்தான் சிறுவயதில் எம்.ஜி.ஆர் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் தாய் பெயரில் சத்யபாமா விலாசம் என இல்லத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

விழாவில் பேசிய சைதை துரைசாமி, எம்ஜிஆர் வளர்ந்த இல்லம் எந்தவித பராமரிப்பும் இன்றி புதர் மண்டிக் கிடப்பதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை கண்ட பின்னர் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதாகவும், பின்னர் எம்ஜிஆரின் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று அதை சீரமைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் இல்லம் திறப்பு விழாவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இல்லைத்தை திறந்து வைத்த பிறகு அருங்காட்சியகத்தில் இருந்த புகைப்படங்களை கேரள மாநில ஆளுநர் சதாசிவம் பார்வையிட்டார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP