ஒடிசா- அரிசி மில் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் அரிசி மில்லின் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
 | 

ஒடிசா- அரிசி மில் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் அரிசி மில்லின் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஒடிசா மாநிலம் தென்கனால் என்ற பகுதியில் அலவுசா மார்க்கெட் என்ற பகுதி உள்ளது. இங்கு காய்கறிகள் கடைகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று இந்த மார்க்கெட்டில் அதிகளவில் கூட்டம் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரிசி மில்லின் சுற்றுப்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்சி 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானோர் அனைவரும் காய்கறி வியாபாரிகள் ஆவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP