ஃபானி புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயில் கட்டணம் இல்லை !

ஃபானி புயலால் பாதித்த பகுதிகளுக்கு ரயில் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப கட்டணம் எதுவும் இல்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 | 

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபானி புயலால் பாதிப்படைந்துள்ள ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ரயில் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப கட்டணம் எதுவும் இல்லை எனவும், நிவாரணப் பொருட்களை அனுப்புபவரும், பெறுபவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆணையர் மூலம் அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே நிலையில், தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், ஏராளமான உபகரணங்கள் புயலில் சிக்கி சேதமடைந்துள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக அங்கு தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP