Logo

பாகிஸ்தானுக்கு 'நோ தக்காளி': மத்திய பிரதேச விவசாயிகள் !

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
 | 

பாகிஸ்தானுக்கு 'நோ தக்காளி': மத்திய பிரதேச விவசாயிகள் !

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். 

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும் மத்தியப்பிரதேசத்தில் விளையும் தக்காளிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

காஷ்மீரில் புல்வாமாவில் மத்தியப்படை வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டனர். பாகிஸ்தானில் ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் 500 முதல் 600 ரூபாய் வரை விற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP