ஜம்மு காஷ்மீர்- சாலை விபத்தில் 9 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 | 

ஜம்மு காஷ்மீர்- சாலை விபத்தில் 9 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த இரு குடும்பத்தினர் வியாபாரத்திற்காக ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள லே பகுதிக்கு துடப்பம் வியாபாரம் செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்ரீநகரிலிருந்து சிமெண்ட பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது.

இதில் லாரியின் அடியில் சிக்கி இரு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒரு சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP