இளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த கணவன் இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவன், இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டிவைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் உள்பட உறவினர்கள் 9 பேர், அந்த இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர்.

திருமணம் ஆன பெண் வேறொரு இளைஞனுடன் ஓடியதால், அவர்களின் உறவினர்களை தன்னுடைய வீட்டிற்கு வந்து பேசுமாறு அந்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள் 3 பேர் அங்கு சென்றபோது அந்த பெண்ணின் கணவன் உட்பட 9 பேர் சேர்ந்து 3 பேரையும் மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர்.

இதில் 2 பேர் பெண்கள் என்பதும், ஒருவர் சிறுமி என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்டவர்களில் 5 பேரை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் ழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP