Logo

புயலை எதிர்கொள்ள கடற்படை தயார்: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

ஃபனி புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் தயார் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

புயலை எதிர்கொள்ள கடற்படை தயார்: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

ஃபனி புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் தயார் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், 3ம் தேதி ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில், பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, ஒடிசாவில் அதிக அளவில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புயல் தாக்கத்தின் போதும், அதன் பிறகும் பெருத்த சேதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், உயிர் சேதத்தை தடுக்க, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர், புரி கடற்கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயலை தாக்கத்தை சமாளிக்க, கடற்படை தயார் நிலையில் இருப்பதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் கடரையை கடக்கும் போது, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், அதை சாமளிப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP