முஸ்லிம்களை சிறுபான்மையினர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்: பிரவீன் தொகாடியா

பெரும்பாலான நிதிச் சலுகைகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதால், சிறுபான்மையின அந்தஸ்திலிருந்து அவர்களது மதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரவீண் தொகாடியா பேசியுள்ளார்.
 | 

முஸ்லிம்களை சிறுபான்மையினர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்: பிரவீன் தொகாடியா

பெரும்பாலான நிதிச் சலுகைகள் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுவதால், சிறுபான்மையின அந்தஸ்திலிருந்து அவர்களது மதத்தை நீக்க வேண்டும் என்று பிரவீண் தொகாடியா பேசியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளராக இருந்த பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பா.ஜ.க-வும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் எனக் கூறி அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிய இந்துத்துவா இயக்கத்தை கடந்த மாதம் அமைத்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து அமைப்புகள் பங்கேற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார்.

அப்போது பேசிய தொகாடியா, " நாட்டு மக்களிடமிருந்து அரசுக்கு ஏராளமான வரிப் பணம் கிடைக்கிறது. ஆனால், அந்த நிதியானது, சிறுபான்மையினத்தவருக்கு தான் அதிகம் செலவிடப்படுகிறது. சிறுபான்மையினர் அந்தஸ்தில் முஸ்லிம்கள் தான் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்களுக்கு தான் அனைத்து நிதியும் செல்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நிதி, ஏழைகளின் நலன்களுக்காக செலவிடப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அவர்களின் ஜனத்தொகையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துவிட்டது. பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, பெண்கள் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களை மத்திய அரசு முறையாக கையாளவில்லை. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தவறிவிட்டது" போலான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

பிரவீன் தொகாடியாவின் முஸ்லிம் விரோத பேச்சுக்கு பல்வேறுத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP