காங்கிரஸ் எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சக எம்எல்ஏ ஆனந்த் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

காங்கிரஸ் எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.என்.கணேஷ்  மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது, அவர்களில் சிலருக்குள் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில், எம்எல்ஏ ஆனந்த்  சிங்கை, கட்சியின் சக எம்எல்ஏ.க்களான கணேஷ் மற்றும் பீமா நாயக் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் முகத்தில் பலத்த காயமடைந்த ஆனந்த் சிங், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆனந்த் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ கணேஷ் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கணேஷை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ள மாநில கட்சி நிர்வாகம், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP